ஈரான் அணு ஆற்றல் பிரச்சினை இன்னும் தீர்க்கப்படவில்லை: ஈரான் வெளியுறவு அமைச்சகம்
2021-06-15 09:56:28

ஈரான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் 14ஆம் நாள் செய்தியாளர் கூட்டத்தில் கூறுகையில், ஆஸ்திரியாவின் தலைநகரில் நடைபெற்ற ஈரான் அணு ஆற்றல் பிரச்சினை பற்றிய பன்முக உடன்படிக்கை பற்றிய கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தொழில் நுட்பம், சட்டம், நிர்வாகம் உள்ளிட்ட சில பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை என்று தெரிவித்தார். அமெரிக்காவின் தற்போதைய அரசு முன்னாள் அரசுத் தலைவர் டிரம்ப் காலத்தின் தவறான பாதையில் நடைபோடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.