7 நாடுகள் குழுவின் தடுப்பூசிகளின் வாக்குறுதி போதாது: ஐ.நா அதிகாரிகள்
2021-06-15 15:20:29

அடுத்த ஆண்டின் இறுதிக்குள் உலகிற்கு 100 கோடி கரோனா வைரஸ் தடுப்பூசிகள் வழங்கப்படும் என்று 7 நாடுகள் குழு அண்மையில் பிரிட்டனில் உச்சி மாநாட்டுக்குப் பின் அறிவித்தது. இது பற்றி, உலகச் சுகாதார அமைப்பின் பொது இயக்குநர் டெட்ரொஸ் உள்ளிட்ட ஐ.நாவின் அதிகாரிகள் கூறுகையில், இந்த எண்ணிக்கை போதாது என்று தெரிவித்தனர்.

டெட்ரொஸ் கூறுகையில், இந்த வினியோகம், ஓர் உதவியாக இருக்கும். ஆனால், எங்களுக்கு மேலதிக தடுப்பூசிகள் மேலும் வேகமாக தேவைப்படுகின்றன என்றும் கூறினார்.