காலநிலை மாற்றத்திற்கான நிதி வாக்குறுதியை ஜி-7 நிறைவேற்ற வேண்டும் : குட்டரேஸ்
2021-06-15 10:04:20

காலநிலை மாற்றத்தைச் சமாளிக்கும் விதமாக ஆண்டுதோறும் வளர்ந்து வரும் நாடுகளுக்கு 10 ஆயிரம் கோடி அமெரிக்க டாலர் நிதி வழங்கும் வாக்குறுதியை வளர்ந்த நாடுகள் குறிப்பாக ஜி-7 நாடுகள் நிறைவேற்ற வேண்டும் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரேஸ் 13ஆம் நாள் மீண்டும் தூண்டினார்.  இந்த வலியுறுத்தி உள்ளார். பல்வேறு தரப்புகளிடையே பரஸ்பர நம்பிக்கையை உருவாக்குவதற்கும் பாரிஸ் உடன்படிக்கையின் செயல்பாட்டு இலக்குகளை நனவாக்குவதற்கும் மிகவும் முக்கியமானது என்றும் குட்டரேஸ் சுட்டிக்காட்டினார்.

2009ஆம் ஆண்டு கோபன்ஹேகன் நகரில் நடைபெற்ற காலநிலை மாற்ற மாநாட்டில் வளர்ந்த நாடுகளின் வாக்குறுதியின்படி, 2020ஆம் ஆண்டுக்குள் ஆண்டுதோறும் வளர்ந்து வரும் நாடுகளுக்கு குறைந்தபட்சமாக 10ஆயிரம் கோடி டாலர் நிதி வழங்கி, காலநிலை மாற்ற அறைகூவலைச் சமாளிக்க உதவ வேண்டும். ஆனால், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேல், வளர்ந்த நாடுகள் இந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. இதுவே, சர்வதேசச் சமூகத்தில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதோடு, காலநிலை மாற்றக் கட்டுப்பாட்டிற்கான சர்வதேச ஒத்துழைப்புக்கு கடும் எதிர்மறை தாக்கங்களையும் கொண்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்க்கது.