தடுப்பூசி வினியோக வேகத்தை விட கரோனா பரவல் வேகம் அதிகம்:உலக சுகாதார அமைப்பு
2021-06-15 10:03:45

கரோனா வைரஸ் பரவல் நிலைமை பற்றி உலக சுகாதார அமைப்பு 14ஆம் நாள் செய்தியாளர் கூட்டம் நடத்தியது. உலக சுகாதார அமைப்பின் பொதுச் செயலாளர் டெட்ரோஸ் இதில் கூறுகையில், உலக அளவில் உருமாறிய கரோனா வைரஸ், நோய் தொற்றைத் தெள்ளத்தெளிவாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் உலகில் பெரும்பாலானோருக்கு தொற்று இருக்கும் வாய்ப்பு அதிகரிக்கும். தற்போது கரோனா தடுப்பூசி வினியோக வேகத்தை விட வைரஸ் பரவல் வேகமாக உள்ளது என்று தெரிவித்தார்.

தடுப்பூசிகள் மிகவும் தேவைப்படும் பிரதேசங்களில், வைரஸ் தொற்று ஏற்பட வாய்ப்பு அதிகமாக இருப்பவர்களுக்கு முன்னுரிமையுடன் தடுப்பூசி போட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.