உலகின் பயங்கரவாத எதிர்ப்புச் சாதனைகளை காலில் போட்டு மிதிக்கும் போலி நீதிமன்றம்
2021-09-14 20:18:14

“உய்கூர் சிறப்பு நீதிமன்றத்தின்” 2ஆவது முறைக் கேட்டறிதல் 13ஆம் நாள் பிரிட்டனில் முடிவுக்கு வந்துள்ளது என்று செய்தி வெளியானது.  உண்மையைத் தெரியாத நபர்கள், இது உண்மையான நீதிமன்றம் என எண்ணுகிறார்கள். ஆனால், இதற்கு சர்வதேச சட்டம் போன்ற எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை. உண்மையில், இது முற்றிலும் போலியான நீதிமன்றம்.

உய்கூர் சிறப்பு நீதிமன்றம் எப்படி உருவானது என்பதை முதலில் பார்ப்போம். வெளிப்படையான தகவலின்படி,  தனியார் உத்தரவாத நிறுவனம் என்ற அடிப்படையில், பிரிட்டனில் அமைக்கப்பட்ட அரசு சாரா குழு ஆகும்.  இந்த குழுவுக்கு அதிகமாக சீனா எதிர்ப்பு மற்றும் பிரிவினைவாத அமைப்பான “உலக உய்கூர் காங்கிரஸ்”  நிதியுதவி அளித்து வருகிறது. மேலும் ஆழமாக பார்த்தால்,  “உலக உய்கூர் காங்கிரஸுக்கு” அமெரிக்க தேசிய ஜனநாயக நிதியத்தின் ஆதரவு கிடைத்துள்ளது. 2016ஆம் ஆண்டு முதல், அமெரிக்காவின் இந்த நிதியம், “உலக உய்கூர் காங்கிரஸ்” உள்ளிட்ட கிழக்கு துருக்கிஸ்தான் அமைப்புக்கு நிதியுதவியை அதிகரித்து வருகிறது. சீனாவின் சின்ஜியாங்கில் பிரிவினைச் சக்திகளுக்கு பணம் வழங்கும் மிகப் பெரிய தரப்பு அது தான்.

பொய்கள், உண்மையை மறைக்க முடியாது.  பயங்கரவாத எதிர்ப்பில் இரட்டை நிலைப்பாடு எடுத்து,  சின்ஜியாங் மீது அவதூறு பரப்பி வரும்  மேற்காத்திய நாடுகளில் சீனா எதிர்ப்புச் சக்திகளின் உள்நோக்கம் என்ன என்பதை சர்வதேச சமூகம் உணர்ந்து கொள்ளலாம்.

உண்மையில், உய்கூர் சிறப்பு நீதிமன்றம், மேற்காத்திய நாடுகளில் சீனா எதிர்ப்புச் சக்திகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு கருவி தான். அது எவ்வளவு மாறினாலும், போலி நீதிமன்றம் என்ற தகுநிலை மாற முடியாது.