சுய் டெ வட்டத்தில் ஷிச்சின்பிங் ஆய்வுப் பயணம்
2021-09-15 10:36:36

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 14ஆம் நாள் யூலின் நகரின் சுய் டெ வட்டத்தில் ஆய்வு பயணம் மேற்கொண்டார். இப்பயணத்தின் போது, மேல்நிலை பள்ளி, சுய் டெ பொருள் சாரா பண்பாட்டுச் செல்வப் பொருட்காட்சியகம், ஹாவ் ஜியா ஜியோ என்ற ஊர் முதலிய இடங்களுக்குச் சென்று, மாணவர்களின் பன்முக வளர்ச்சி, பாரம்பரிய பண்பாட்டின் பாதுகாப்பு, கிராமப்புறங்களுக்குப் புத்துயிர் ஊட்டுவது முதலிய அம்சங்கள் குறித்து ஆய்வு செய்தார்.