சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு தீங்கு விளைவிக்கும் செயலைத் தடுக்க வேண்டும்!
2021-09-17 17:18:42

பிரான்ஸை பொறுத்த வரை, செப்டம்பர் 17ஆம் நாள், அமெரிக்காவுடன் இணைந்து, ‘செசபீக் போரின்’ 240ஆம் ஆண்டு நிறைவைக் கூட்டாக கொண்டாடவிருக்கும். ஆனால், இதற்கு முந்தய நாளில், அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா ஆகிய மூன்று நாடுகள், இந்தோ-பசிபிக் பாதுகாப்புக் கூட்டணியை உருவாக்குவதாக திடீரென அறிவித்ததோடு, அணுசக்தி மூழ்கிக் கப்பல் தொழிநுட்பத்தின் பகிர்வு மற்றும் தயாரிப்பு ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டுள்ளன. இதன் விளைவாக, பிரான்ஸுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே அதிக தொகை கொண்ட ஒப்பந்தம் செயலுக்கு வரவில்லை.  இது குறித்து கோபம் அடைந்த பிரான்ஸ்,  அந்தக் கொண்டாட்டத்தை ரத்து செய்துள்ளது.

இந்த நிகழ்வு குறித்து, இணையப் பயனர் ஒருவர் சொல்வது போல, நண்பருக்குப் பதிலாக பணத்தையும், அமைதிக்குப் பதிலாக போரையும் அமெரிக்கா தேர்ந்தெடுத்துள்ளது.

இதற்கிடையில் ஒன்று கவனிக்கத் தக்கது. அணு ஆயுதம் கொண்ட  அமெரிக்கா, பிரிட்டனுடன் சேர்ந்து, அணு ஆயுதம் இல்லாத ஆஸ்திரேலியாவுக்கு ராணுவ நோக்கில் பயன்படும் அணுத் தொழில் நுட்ப உதவி வழங்குகிறது. இது, வெளிப்படையாக எடுக்கப்படும் அணு ஆயுதப் பரவல் செயல் தான். கொரிய தீபகற்கத்தில் அணுப் பிரச்சினை மற்றும் ஈரான் அணுப் பிரச்சினை போன்ற சூடான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு கடும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு தீங்கு விளைவிக்கும் விதமாக அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியாவின் செயலைத் தடுக்க பன்னாட்டுச் சமூகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.