அமெரிக்காவில் ஆள் கடத்தல் வியாபாரம், கட்டாய உழைப்புக்கு சீனா கண்டனம்
2021-09-23 18:48:17

ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலின் 48ஆவது கூட்டத் தொடரில், அமெரிக்காவின் ஆள் கடத்தல் வியாபாரம், கட்டாய உழைப்பு போன்ற பிரச்சினைகள் மீதான கவனத்தை பல நாடுகள் தெரிவித்தன. அமெரிக்காவின் இப்பிரச்சினைகளில் சீனாவும் கவனம் செலுத்தியுள்ளது.

சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் சாவ் லிஜியன் 23ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கூறுகையில், அமெரிக்காவின் வரலாற்றில் அடிமை முறையும் அடிமை வியாபாரமும் நடைமுறைப்படுத்தப்பட்டு, செவ்விந்தியர்கள் இனப் படுகொலை ஆளானர்கள். தற்போதும் ஆள் கடத்தல் வியாபாரத்திலும் கட்டாய உழைப்பிலும் அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது என்று தெரிவித்தார்.

மேலும், கடந்த 5 ஆண்டுகளில் ஆண்டுதோறும் சுமார் 1 லட்சம் பேர் அமெரிக்காவுக்கு விற்பனை செய்யப்பட்டு கட்டாய உழைப்பில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். அமெரிக்காவில் தற்போது சுமார் 5 லட்சம் குழந்தைகள் வேளாண் உழைப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களில் பலருக்கு வயது 10க்கு குறைவு. உலகளவில், குழந்தை உரிமைகளுக்கான பொது ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ளாத ஒரேயொரு நாடு அமெரிக்காதான். மகளிருக்கு எதிரான அனைத்து வடிவிலான பாகுபாட்டை ஒழிப்பதற்கான பொது ஒப்பந்தத்தையும் அமெரிக்கா ஏற்றுக் கொள்ளவில்லை. அமெரிக்கா உடனே நடவடிக்கையை மேற்கொண்டு, மனித உரிமைகள் தொடர்பான பொது ஒப்பந்தங்களை ஏற்றுக் கொண்டு, ஆள் கடத்தல் வியாபாரம், கட்டாய உழைப்பு ஆகியவை தொடர்பான குற்றச் செயல்களைத் தடுக்க வேண்டும். ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் உள்பட இயங்குமுறைகள் இதில் தொடர்ந்து கவனம் செலுத்தி, உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.