மீட்சி அடைந்து வரும் உலகச் சேவை வர்த்தகம்
2021-09-24 10:39:38

உலக வர்த்தக அமைப்பு உள்ளூர் நேரப்படி செப்டம்பர் 23ஆம் நாள், புதிய புள்ளிவிவரங்களை வெளியிட்டது. அதன்படி, உலகின் இரண்டாவது மற்றும் மூன்றாவது காலாண்டுகளில், சேவை வர்த்தகம் தொடர்ந்து மீட்சி அடைந்து வருகின்றது. இவ்வாண்டின் முதலாவது காலாண்டின் உலகச் சேவை வர்த்தகம், கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 13.9 விழுக்காடு குறைவாகும். புதிய ரக கரோனா வைரஸ் பரவலின் தொடக்கத்தில், சேவை வர்த்தகம் கடுமையாக வீழ்ச்சியடைந்தது. அதற்குப் பிறகு, பகுதியாக மீட்சி மட்டுமே காணப்பட்டது. மேலும், கரோனா வைரஸ் பரவலானது, சுற்றுலா துறையைத் தொடர்ந்து  பாதித்து வருகின்றது.