ஹாங்காங் விவகாரங்களில் தலையிடுவதிலும் சீனாவை எதிர்த்து ஹாங்காங்கைக் குழப்பமாக்கும் சக்தியை ஆதரிப்பதிலும் அமெரிக்காவின் ஈடுபாடு பற்றிய உண்மைகள்
2021-09-24 15:14:17

ஹாங்காங் விவகாரங்களில் தலையிடுவதிலும் சீனாவை எதிர்த்து ஹாங்காங்கைக் குழப்பமாக்கும் சக்தியை ஆதரிப்பதிலும் அமெரிக்காவின் ஈடுபாடு  பற்றிய உண்மைகளை, சீன வெளியுறவு அமைச்சகம் 24ஆம் நாள் வெள்ளிக்கிழமை வெளியிட்டது.

இந்த உண்மைகள் பற்றிய விவரங்கள்:

1, ஹாங்காங் பற்றிய சட்ட வரைவை உருவாக்கி, ஹாங்காங்கிற்கான சீனாவின் கொள்கைகள் மீது அவதூறு  பரப்பி, ஹாங்காங் விவகாரத்தில் ஈடுபட்டு, சீனாவின் உள்விகாரங்களில் பெரிதும் தலையிடுதல்

2, தடைகளை மேற்கொண்டு, ஹாங்காங் பாதுகாப்புச் சட்டம் மற்றும் சீனத் தேசிய மக்கள் பேரவையின் தொடர்புடைய தீர்மானங்கள் ஹாங்காங்கில் அமலுக்கு வருவதைத் தடுக்க முயல்தல்

3  ஹாங்காங்  சிறப்பு நிர்வாகப் பிரதேச விவகாரங்கள் மீது அவதூறு பரப்பி, ஹாங்காங்கின் செழிப்பு மற்றும் நிலைப்புத்தன்மையைச் சீர்குலைத்தல்

4, சீனாவை எதிர்த்து ஹாங்காங்கை குழப்பமாக்கும் கலவரக்காரர்களுக்கு ஆதரவு அளித்து, அவர்கள் “ஹாங்காங் சுதந்திரம்”என்ற கருத்தையும் அரசியல் பொய்களையும் பரப்புவதற்கு இடம் அளித்தல்

5, கூட்டணிகளைத் திரட்டி ஹாங்காங் விவகாரங்களில் தலையிட்டு, கூட்டறிக்கையை வெளியிட்டு ஹாங்காங் விவகாரம் குறித்த பொறுப்பற்ற கருத்துக்களை தெரிவித்தல்

ஹாங்காங்கிலுள்ள சீன வெளியுறவு அமைச்சகத்தின் அலுவலகச் செய்தித் தொடர்பாளர் பேசுகையில்,

சீனா இந்த உண்மைகளை வெளியிடுவது என்பது,  முன்னதாக ஹாங்காங் வணிக எச்சரிக்கையை வெளியிடுதல் ஹாங்காங்கில் உள்ள மத்திய அரசின் அதிகாரிகளுக்கு தடை விதித்தல் போன்ற அமெரிக்கா கொடுமைப்படுத்தும் செயல்பாட்டிற்கு பதிலாகும்.  சர்வதேச உறவின் அடிப்படை விதிகளை நீண்டகாலமாக மீறி வரும் அமெரிக்கா  ஹாங்காங் விவகாரம் மற்றும் சீனாவின் உள்விவகாரங்களில் தலையிட்டு, ஹாங்காங்கின் செழிப்பு மற்றும் நிலைப்புத்தன்மையைக் சீர்குலைக்கும் செயல்பாடுகளின் வெளிப்பாடாகவும் திகழ்கிறது. நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு, வளர்ச்சி நலன்கள் ஆகியவற்றை சீனா பேணிக்காக்கும் மனவுறுதி மற்றும் திறமையை அது எடுத்துக்காட்டுகிறது என்று தெரிவித்தார்.