தொற்று நோய் தடுப்பில் அமெரிக்கா சொல்லும் செயலும் ஒரேமாதிரி இருக்குமா?
2021-09-24 11:00:18

அமெரிக்க அரசுத் தலைவர் ஜோ பைடன் 22ஆம் நாள் புதன்கிழமை, காணொலி வழியாக  கோவிட்-19 பற்றிய உலக உச்சி மாநாட்டிற்குத் தலைமைத் தாங்கினார். அப்போது,  உலக தொற்று நோய் தடுப்பில் அமெரிக்காவின் பங்களிப்புகளை பலமுறை குறிப்பிட்ட அவர், அடுத்த கட்ட தடுப்பூசி உதவித் திட்டத்தையும் வெளியிட்டார். ஆனால், அமெரிக்காவின் இந்த திட்டங்கள் மீது பன்னாடுகள் கேள்வி எழுப்பியுள்ளன.

அமெரிக்கா  ஏற்கனவே இந்த உச்சி மாநாட்டைப் அதிக பரப்புரை செய்துள்ளது. இருப்பினும், சில முக்கிய நாடுகளின் தலைவர்கள் இதில் பங்கேற்கவில்லை. ஏனென்றால், கோவிட்-19 தொற்று நோய் தடுப்பில் அமெரிக்காவின் தலைமைத் திறன் மற்றும் அதன் நோக்கம் ஆகியவற்றின் மீது  பன்னாடுகள் பெரும் சந்தேகம் கொள்கின்றன.

நோய் தொற்று பரவல் ஏற்பட்ட பிறகு, பங்களிப்புகளுக்குப் மாறாக, அமெரிக்க அரசியல்வாதிகள் உலகளவில் அதிக அரசியல் வைரஸ்களையே ஏற்றுமதி செய்துள்ளனர்.  அரசியல் நோக்குடன் தந்திரத்தை செயல்படுத்தி வரும் அமெரிக்கா,  தொற்று தடுப்புக்கான சர்வதேச ஒத்துழைப்புகளைச் சீர்குலைத்துள்ளது. அமெரிக்காவின் இச்செயல், பன்னாட்டுச் சமூகத்தில் பொதுவான விமர்சனங்களைச் சந்தித்துள்ளன.

இந்த மாநாட்டில்,  கோவிட்-19 தொற்றைத் தோற்கடிக்க வேண்டியது அவசியம் என்று அமெரிக்கா பலமுறை கூறியதுடன், ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்புடன் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தது. இந்நிலையில் அமெரிக்கா சொல்லும் செயலும் ஒன்றாக இருக்குமா என்ற கேள்வி  மக்களிடையே எழுந்துள்ளது.