ஐ.நா. பொதுப் பேரவை தலைவருடன் உரையாடிய வாங்யீ
2021-09-24 15:42:21

சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ, செப்டம்பர் திங்கள் 23ஆம் நாள் காணொலி வழியாக, ஐ.நா பொது பேரவையின் 76ஆவது கூட்டத் தொடரின் தலைவரும், மாலத்தீவின் வெளியுறவு அமைச்சருமான அப்துல்ல ஷாகித்துடன்  சந்தித்துப் பேசினார்.

அப்போது, வாங்யீ கூறுகையில், கரோனா வைரஸ் தடுப்புக்கான சர்வதேச ஒத்துழைப்பை விரைவுபடுத்தி, தடுப்பூசிகளுக்கான நியாயமான வினியோகத்தினை  உத்தரவாதம் செய்து வருவதை முன்னேற்றுவதில் ஐ.நாவின் புதிய பொதுப் பேரவை மேலும் முக்கிய பங்காற்ற வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர்,  காலநிலை மாற்றத்தைச் சமாளித்து, உயிரினங்களின் பல்வகை தன்மையைப் பேணிக்காப்பதில் வலிமை மிக்க ஒலி எழுப்பவும், தொடரவல்ல வளர்ச்சியை மேம்படுத்தும் பணிகளை ஒருங்கிணைத்து பயன்களை அதிகரிக்கவும் வேண்டும் என்றும் தெரிவித்தார்.