ஹாங்காங் விவகாரத்தில் அமெரிக்கா தலையிட்ட சான்றுகள்
2021-09-24 19:06:30

ஹாங்காங் விவகாரத்தில் அமெரிக்கா தலையிட்டு, சீனாவை எதிர்க்கும் சக்திக்கு ஆதரவு அளிக்கும் உண்மைகள் பட்டியலைச் சீன வெளியுறவு அமைச்சகம் செப்டம்பர் 24ஆம் நாள் வெளியிட்டது. இந்தச் சான்றுகளின் மூலம், ஹாங்காங் விவகாரத்தில் தலையிட்டு வரும் அமெரிக்காவின் இழிவான வழிமுறைகள் மற்றும் போலித்தனமான இரட்டை வரையறையை மக்கள் காணலாம். அது மட்டுமல்லாமல், அமெரிக்காவின் மேலாதிக்கப்போக்கையும், ஹாங்காங் நிலைமையைக் குழப்பமாக்குவதன் மூலம் சீன வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தையும் உணர்ந்து கொள்ள முடியும்.

ஹாங்காங் விவகாரத்தில் அமெரிக்கா தலையிட்ட 102 செயல்கள் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன. ஜனநாயகம், சுதந்திரம், மனித உரிமை, சட்ட ஒழுங்கு உள்ளிட்ட விவகாரங்களில் அமெரிக்கா மேற்கொண்ட இரட்டை வரையறை நகைப்பிற்கிடமானது என்று இவை வெளிப்படுத்தியுள்ளன. மேலும், நடைபெற்று கொண்டிருகின்ற ஐ.நாவின் மனித உரிமை செயற்குழுவின் 48வது கூட்டத்தொடரில், மனித உரிமைகளை கடுமையாக மீறிய அமெரிக்காவுக்குப் பல நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

தற்போது, அமெரிக்கா தொடுத்த கலவரமும், ஜனநாயகம், உரிமை, சுதந்திரம், சட்ட ஒழுங்கு ஆகியவற்றை அமெரிக்கா ஊறுபடுத்திய சம்பவங்களும் உலகத்தின் பல்வேறு இடங்களில் காணப்படலாம்.

ஹாங்காங் விவகாரத்தில் தலையிடுவதன் மூலம் சீன வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் அமெரிக்காவின் நோக்கம் நனவாகாது. சீனாவின் உள்விவகாரத்தில் தலையிட்டு, சீனாவின் நலன் மற்றும் மதிப்பைச் சீர்க்குலைக்கும் செயல்களுக்குச் சீனா உரிய பதிலடி கொடுப்பது உறுதி என்று சீனா மேற்கொண்ட நடவடிக்கைகள் எடுத்துக்காட்டியுள்ளன.