2021ஆம் ஆண்டு ட்சொங் குவான் சுன் கருத்தரங்கில் ஷி ச்சின்பிங் முக்கிய உரை
2021-09-24 20:36:14

2021ஆம் ஆண்டு ட்சொங் குவான் சுன் கருத்தரங்கு செப்டம்பர் 24ஆம் நாள் பெய்ஜிங்கில் துவங்கியது. சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் இதில் காணொளி மூலம் வாழ்த்து உரை நிகழ்த்தினார்.

அவர் கூறுகையில், தற்போது, உலகப் பொருளாதாரம் கடும் அறைகூவலை எதிர்நோக்கி வருகிறது. பல்வேறு நாடுகள் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப ஒத்துழைப்பை வலுப்படுத்தி, அறிவியல் மற்றும் தொழில் நுட்ப புத்தாக்கத்தின் மூலம் சர்வதேசப் பிரச்சினைகளைத் தீர்க்கும் வழிமுறைகளைத் தேடி, புதிய காலத்தின் அறைகூவல்களைக் கூட்டாகச் சமாளித்து, மனித குலத்தின் அமைதி மற்றும் வளர்ச்சியை முன்னேற்ற வேண்டும் என்றார்.

மேலும், அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துக்கான புத்தாக்கத்துக்குச் சீனா பெரும் முக்கியத்துவம் அளித்து வருகிறது. எதிர்காலத்தில், மேலும் திறப்பான மனப்பாங்குடன் சர்வதேச அறிவியல் மற்றும் தொழில் நுட்பப் பரிமாற்றத்தை வலுப்படுத்தி, அடிப்படை ஆய்வுகளை முன்னேற்றி, உலக அறிவியல் மற்றும் தொழில் நுட்ப மேளாண்மையை மேம்படுத்தி, மனித குலத்துக்கு சீனா மேலும் நன்றாக நன்மை புரியும் என்றும் ஷி ச்சின்பிங் தெரிவித்தார்.