மனித உரிமையைச் சாக்குப்போக்காகக் கொண்டு சீன உள்விவகாரத்தில் தலையிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த வெனிசுலா மற்றும் பெலாரஸ்
2021-09-25 16:11:58

செப்டம்பர் 24ஆம் நாள், ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நாவின் மனித உரிமைச் செயற்குழுவின் 48ஆவது கூட்டத் தொடரில், பாகிஸ்தான் 65 நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி, கூட்டு உரை நிகழ்த்தியது. பாகிஸ்தான் கூறுகையில், ஹாங்காங், சின்ஜியாங், திபெத் ஆகியவற்றின் விவகாரங்கள் சீனாவின் உள்விவகாரங்களாகும். வெளியுலகம் இவற்றில் தலையிட வேண்டாம். இக்கூட்டத் தொடரில் கலந்து கொண்ட வெனிசுலா, பெலாரஸ் ஆகிய நாடுகளின் தூதர்கள் செய்தியாளருக்குப் பேட்டியளித்த போது கூறுகையில், பல்வேறு நாடுகளின் இறையாண்மை, சுதந்திரம் மற்றும் உரிமைப் பிரதேச ஒருமைப்பாட்டுக்கு மதிப்பளிக்க வேண்டும். பிற நாடுகளின் உள்விவகாரத்தில் தலையிட கூடாது என்பது சர்வதேச உறவின் அடிப்படை விதியாகும் என்று தெரிவித்தனர்.