தனிச்சிறப்பு வாய்ந்த வளர்ச்சி பாதை சீனா!
2021-09-25 16:32:32

ஐ.நா மனித உரிமை செயற்குழுவின் 48ஆவது கூட்டத்தொடர் ஜெனிவாவில் நடைபெறுகின்றது. இக்கூட்டத்தொடரில் கலந்துகொண்ட சீன வெளியுறவு துணை அமைச்சர் மா சாவ் சூ சீனாவின் நிலைப்பாட்டை எடுத்துரைத்தார்.

இப்போது புதிய ரக கரோனா வைரஸ், பல்வேறு நாட்டு மக்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் எல்லோருக்கும் மனித உரிமை கிடைப்பது, மனித குலத்தின் பொது இலக்காகவும் சீனாவின் இலக்காகவும் உள்ளது. இக்கூட்டத்தொடரில், சீனா, ஷி ச்சின்பிங் புதிய யுக சீன தனிச்சிறப்புடைய சோஷலிச சிந்தனையையும் ஷி ச்சின்பிங் தூதாண்மை சிந்தனையையும் வழிகாட்டுதலாக கொண்டு, முன்மொழிந்து பங்காற்றுகின்றது. சொந்த நிலைமைக்கு பொருத்தமான மனித உரிமை வளர்ச்சி பாதையில் சீனா ஊன்றி நின்று, சர்வதேச மனித உரிமை இலட்சிய வளர்ச்சிக்கு பங்காற்றி வருகின்றது என்று மா சாவ்சூ தெரிவித்தார்.