ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை தொடர்பான வர்த்தக மற்றும் முதலீட்டு மன்றக் கூட்டம்
2021-12-03 10:35:08

ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை தொடர்பான வர்த்தக மற்றும் முதலீட்டு மன்றக் கூட்டம்_fororder_src=http-%2F%2Fx0.ifengimg.com%2Fres%2F2021%2F0AB9709BE247C22E9F7BCC2E31458670B4DE0305_size123_w1023_h682.jpeg&refer=http-%2F%2Fx0.ifengimg

ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை தொடர்பான வர்த்தக மற்றும் முதலீட்டு மன்றத்தின் 2021ஆம் ஆண்டு கூட்டம் வியாழக்கிழமை பெய்ஜிங் மாநகரில் நடைபெற்றது. கூட்டு முன்னேற்றம், திறப்பு மற்றும் ஒத்துழைப்பு, கூட்டு வழிகாட்டல், பொருளாதார மீட்சி ஆகியவை இக்கூட்டத்தின் தலைப்பாகும். 77 நாடுகளைச் சேர்ந்த அரசாங்க அதிகாரிகள், வணிகச் சங்கத்தின் பிரதிநிதிகள், புகழ்பெற்ற தொழில் முனைவோர்கள் மற்றும் பன்னாட்டு அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகிய 600க்கும் அதிகமானோர் நேரடியாக மற்றும் இணையம் மூலம் இக்கூட்டத்தில் பங்கெடுத்தனர். எண்ணியல் பொருளாதாரம், சுகாதாரம் முதலிய துறைகளில் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை மேலதிக பங்காற்ற வேண்டும் என்று அவர்கள் விருப்பம் தெரிவித்தனர்.

அடுத்த ஆண்டு ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவின் கட்டுமானத்தில் அர்ஜென்டினா அதிகாரப்பூர்வமாகக் கலந்து கொள்ளும் என்று சீனாவுக்கான அந்நாட்டின் தூதர் கூட்டத்தில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.