சீனா மீதான மேலை நாடுகளின் தடை நடவடிக்கைகளுக்கு ஆதாரம் இல்லை:புதின்
2021-12-04 17:04:07

சீனா மீதான மேலை நாடுகளின் தடை நடவடிக்கைகளுக்கு ஆதாரம் இல்லை:புதின்_fororder_1125257375_15743041685911n

ரஷிய அரசுத் தலைவர் விளாடிமிர் புதின் நவம்பர் 30ஆம் நாள் கூறுகையில், சீனாவின் மீது மேலை நாடுகள் மேற்கொண்ட பல்வேறு தடை நடவடிக்கைகளுக்கு ஆதாரம் இல்லை என்றார். இவை சர்வதேச சட்டத்துக்கு மீறிய செயலாகும். சீனாவுடனான உறவில் வேறு நாடுகளின் நலன் ரஷியாவின் முடிவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தாது. மேலும், 2022ஆம் ஆண்டு பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் துவக்க விழாவில் அவர் பங்கெடுக்கவுள்ளார் என்றார்.

“Russia calling” என்னும் 2021ஆம் ஆண்டு சர்வதேச முதலீட்டுக் கருத்தரங்கில் அவர் இவ்வாறு கூறினார். மேலும், சீனாவின் மீது மேலை நாடுகள் மேற்கொண்ட செயல்கள் பற்றி மக்களால் புரிந்து கொள்ள முடியவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.