குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி இடங்களில் ஷி ச்சின்பிங் ஆய்வுப் பயணம்
2022-01-05 10:03:00

குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி இடங்களில் ஷி ச்சின்பிங் ஆய்வுப் பயணம்_fororder_59f642c3082649fa94fc4e8f5e4bcc98

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் ஜனவரி 4ஆம் நாள் சீனத் தேசிய விரைவு சறுக்கல் அரங்கு, முக்கிய ஊடக மையம், விளையாட்டு வீரர்களின் கிராமம், விளையாட்டுச் செயல்பாட்டுக் கட்டளை மையம், பனி விளையாட்டுப் பயிற்சித் தளம் ஆகிய இடங்களில் ஆய்வுப் பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி மற்றும் பாரலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான ஆயத்தப் பணிகளை அறிந்து கொண்டு, விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள், செயல்பாட்டுக் குழுக்களின் பணியாளர்கள், அறிவியல் ஆராய்ச்சி பணியாளர்கள், செய்தியாளர்கள், தன்னார்வலர்கள் முதலியோருக்குப் புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்தார்.