22ஆவது சீன-பிரான்ஸ் நெடுநோக்குப் பேச்சுவார்த்தை
2022-01-14 12:15:23

சீன அரசவை உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங்யீ, பிரான்ஸ் அரசுத் தலைவரின் வெளிவிவகார ஆலோசகர் போனா ஆகியோர் ஜியாங் சூ மாநிலத்தின் வூசி நகரில் 22ஆவது சீன-பிரான்ஸ் நெடுநோக்குப் பேச்சுவார்த்தைக்குக் கூட்டாகத் தலைமை தாங்கினர். இருதரப்பினர் மனம் திறந்து பரிமாறிக் கொண்டுள்ளனர். பல முக்கிய பிரச்சினைகளில் இரு நாடுகளும் ஒத்த கருத்துக்களைக் கொண்டுள்ளன என்று அவர்கள் கருத்து தெரிவித்தனர். சீன-பிரான்ஸ் மற்றும் சீன-ஐரோப்பிய உறவு சீரான நிதானமான வளர்ச்சியை முன்னேற்ற அவர்கள் விரும்புகின்றனர்.

சீனாவின் மீதான ஆக்கப்பூர்வ மற்றும் பயன்தரும் கொள்கையில் ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்து நிலைத்து நிற்க வேண்டும் என்று வாங்யீ விருப்பம் தெரிவித்தார். ஐரோப்பிய நாடுகள் சுய நிர்ணய நெடுநோக்கில் தொடர்ந்து நிலைத்து நின்று, ஐரோப்பாவும் சீனாவும் ஒன்றையொன்று எதிர்க்கக் கூடாது. மோதலில் ஈடுப்படக்கூடாது. ஐரோப்பிய நாடுகளும் சீனாவும் தொடர்ந்து உயர்தர ஒத்துழைப்புக் கூட்டாளியுறவை வளர்க்க வேண்டும் என்று போனா தெரிவித்தார்.