அரசியல் மற்றும் சட்டப் பணிக்கு ஷிச்சின்பிங் உத்தரவு
2022-01-15 16:57:43

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும், அரசுத் தலைவரும், மத்திய இராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷிச்சின்பிங் அண்மையில், அரசியல் மற்றும் சட்டப் பணிக்கு முக்கிய உத்தரவிட்டார்.

அப்போது அவர் கூறுகையில், அரசியல் மற்றும் சட்டப் பணியில் கட்சியின் தலைமையைப் பின்பற்றி, கட்சியின் நூற்றாண்டு போராட்டத்தில் அறிவு மற்றும் ஆற்றலைப் பெற்று, கடும் இடர்ப்பாட்டைத் தடுத்து அகற்றும் திறனை உயர்த்த வேண்டும் என்றும், அரசியல் மற்றும் சட்டத் துறையில் சீர்திருத்தத்தை ஆழமாக்கி, தேசிய பாதுகாப்பு, சமூக நிலைத்தன்மை, அமைதியான மக்கள் வாழ்வு ஆகியவற்றைப் பேணிக்காக்கும் முக்கிய கடமையைச் செவ்வனே நிறைவேற்றி, பொது மக்களுக்கு நீதி நியாயம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மத்திய அரசியல் மற்றும் சட்டப் பணிக் கூட்டம் 15ஆம் நாள் பெய்ஜிங்கில் துவங்கியது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டி அரசியல் குழுவின் உறுப்பினரும் அரசியல் மற்றும் சட்ட ஆணையத்தின் செயலாளருமான குவோ ஷெங்குன் இக்கூட்டத்தில் ஷிச்சின்பிங் அளித்த உத்தரவைத் தெரிவித்தார்.