பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் துணைத் தலைவர் பாராட்டு
2022-01-15 16:28:51

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் துணைத் தலைவரும், ஆஸ்திரேலியா ஒலிம்பிக் கமிட்டி தலைவருமான ஜான் டவ்லிங் கோட்ஸ் ஜனவரி பிற்பகுதியில் பெய்ஜிங்கிற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். இப்பயணத்தை முன்னிட்டு சீன ஊடகக் குழுமத்தின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான ஆயத்தப் பணிகளை அவர் வெகுவாகப் பாராட்டினார்.

பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான ஆயத்தப் பணியில் கோட்ஸ் கவனம் செலுத்தி வருகிறார். அவர் கூறுகையில், இப்போட்டி அரங்குகளின் கட்டுமானமும் கரோனா வைரஸ் பரவல் தடுப்புப் பணியும் மிகவும் சிறப்பாக உள்ளது என்றார். பெய்ஜிங்கைச் சென்றடைந்த ஆஸ்திரேலியா வீரர்கள், உள்ளூர் வைரஸ் பரவல் தடுப்புக் கொள்கை குறித்து புரிந்துணர்வையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர் என்றார்.