ஏகபோக எதிர்ப்பு துறையில் சட்ட அமலாக்கத்தை வலுப்படுத்த வேண்டும்
2022-01-16 16:17:00

பெய்ஜிங்கில் நடைபெற்ற மத்திய அரசியல் மற்றும் சட்டப் பணிக் கூட்டத்தில், சட்ட அமலாக்கத்தை வலுப்படுத்தி வணிகச் சூழலை மேலும் மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

16ஆம் நாள் கிடைத்த தகவலின்படி, ஏகபோக எதிர்ப்பு, சரியற்ற விளம்பர எதிர்ப்பு, நியாயமற்ற போட்டி எதிர்ப்பு ஆகிய துறைகளில் சட்ட அமலாக்கத்தை வலுப்படுத்தி, தொடர்புடைய சட்ட விதிகளை முழுமையாக்க வேண்டும். தவறான செயலில் ஈடுபட்ட நிறுவனங்களின் சீர்திருத்தத்தை சட்டப்படி முன்னேற்றவும், சொத்துரிமை தொடர்பான நியாயமற்ற வழக்குகளைப் பிரித்தறிந்து சரி செய்யும் வழக்கமான இயங்குமுறையை மேம்படுத்தவும் வேண்டும். வணிகர்களுக்கு நம்பிக்கையையும் தொழில் நிறுவனங்களுக்கு நன்மையையும் தரக் கூடிய நடவடிக்கைகளை மேற்கொண்டு, அரசு சாரா தொழில் நிறுவனங்களின் சட்டப்பூர்வ அலுவல்களையும் வளர்ச்சியையும் முன்னேற்ற வேண்டும் என்று இக்கூட்டத்தில் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.