அமெரிக்கா மற்றும் ரஷியாவுடன் சந்திப்புக்கான உக்ரைனின் முன்மொழிவு
2022-01-16 16:04:16

உக்ரைன் அரசுத் தலைவர் அலுவலகத்தின் இயக்குநர் யர்மார்க் ஜனவரி 14ஆம் நாள் கூறுகையில், அமெரிக்க அரசுத் தலைவர் ஜோன் பைடன் மற்றும் ரஷிய அரசுத் தலைவர் விளாடிமிர் புதினுடன் சந்திப்பு நடத்த உக்ரைன் அரசுத் தலைவர் ஜெலென்ஸ்கி விருப்பம் தெரிவித்ததாக கூறினார்.

தற்போது, ரஷியாவின் பதிலுக்காக உக்ரைன் காத்திருக்கிறது. இச்சந்திப்பில் பங்கெடுக்க அமெரிக்கா விருப்பம் தெரிவித்துள்ளது என்றும் யர்மார்க் தெரிவித்தார்.

ஆனால், மூன்று தரப்புகளின் சந்திப்பு குறித்து, ரஷிய அரசுத் தலைவரின் செய்திச் செயலாளர் 14ஆம் நாள் கூறுகையில், இதுவரை ரஷியாவுக்கு எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என்றார்.