சிங்காய்-திபெத் பீடபூமியில் இயங்கும் முதலாவது வரி விலக்கு மண்டலம்
2022-01-16 19:20:52

கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சாதனங்களை ஏற்றிச் செல்லும் 2 லாரிகள் 16ஆம் நாள் சிங்காய் மாநிலத்திலுள்ள சிநிங் ஒட்டுமொத்த வரி விலக்கு மண்டலத்தில் நுழைந்தன. சிங்காய்-திபெத் பீடபூமியில் முதலாவது ஒட்டுமொத்த வரி விலக்கு மண்டலம் அதிகாரப்பூர்வமாக இயங்கத் தொடங்கியதை இது காட்டுகிறது. 5 நிறுவனங்கள் முதல் தொகுதியாக இம்மண்டலத்தில் சேர்ந்துள்ளன.

சிநிங் நகரின் டாதொங் ஹுய் மற்றும் து இனத் தன்னாட்சி மாவட்டத்தில் அமைந்துள்ள சிநிங் ஒட்டுமொத்த வரி விலக்கு மண்டலம், கடந்த டிசம்பர் 20ஆம் நாள் அரசின் அதிகாரப்பூர்வ அங்கீகாரத்தைப் பெற்றது.

சிங்காய் மாநிலம் திறந்த பொருளாதார வளர்ச்சியை முன்னேற்றுவதற்கு முக்கியத்துவம் வாய்ந்த இம்மண்டலம், சீனாவின் இரட்டை சுழற்சி எனும் புதிய வளர்ச்சிக் கட்டமைப்புக்கு ஆக்கப்பூர்வமாகப் பங்காற்றும்.