உலகத்தின் முதலாவது இடத்தைப் பெற்ற சீனக் கப்பல் கட்டுமானத் தொழில்
2022-01-16 16:47:43

உலகத்தின் முதலாவது இடத்தைப் பெற்ற சீனக் கப்பல் கட்டுமானத் தொழில்_fororder_微信图片_20220116154136

சீனத் தேசிய கப்பல் கட்டுமானத் தொழில் சங்கம் ஜனவரி 16ஆம் நாள் வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, 2021ஆம் ஆண்டு, சீனாவின் கப்பல் கட்டுமானத் தொழிலின் 3 குறியீடுகள், உலகின் முதலாவது இடத்தைத் தொடர்ச்சியாக வகிக்கின்றன.

கப்பல் கட்டுமானத்தை நிறைவேற்றிய அளவு, புதிதாகப் பெற்ற முன்பதிவுப் படிவங்களின் எண்ணிக்கை, கையால் பெறப்பட்ட படிவங்களின் எண்ணிக்கை ஆகிய 3 குறியீடுகளின்படி, 2021ஆம் ஆண்டு சீனாவின் 6 கப்பல் கட்டுமானத் தொழில் நிறுவனங்கள் உலகின் முதல் 10 இடங்களில் உள்ளன. குறிப்பாக, சீனாவின் மிகப் பெரிய கப்பல் கட்டுமானத் தொழில் நிறுவனமான சீனக் கப்பல் கட்டுமான நிறுவனம், உலகின் மிகப் பெரிய கப்பல் கட்டுமான நிறுவனமாக விளங்கியுள்ளது.

மேலும், 2021ஆம் ஆண்டு சீனாவின் புதிய கப்பல் கட்டுமானத்துக்கான முன்பதிவுப் படிவங்களின்படி, 18 முக்கிய கப்பல் வகைகளில், சீனாவின் 10 கப்பல் வகைகளின் எண்ணிக்கை உலகின் முதலாவது இடத்தைப் பெற்றுள்ளது.

மேம்பாடுகள் கொண்ட கப்பல் வகைகளைத் தவிர, சீனாவின் உயர் தொழில் நுட்பம் மற்றும் இணைப்பு மதிப்பு கொண்ட கப்பல் வகைகள் சர்வதேச சந்தையில் விகிதப்பங்கு தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது என்பது குறிப்படத்தக்கது.