ச்சே ஜீ-பாச் காணொளி வழியாக சந்திப்பு
2022-01-16 19:22:16

சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழுவின் உறுப்பினரும் பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் அமைப்புக் கழுவின் தலைவருமான ச்சே ஜீ, காணொளி வழியாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் டோமஸ் பாசைச் சந்தித்தார்.

ச்சே ஜீ, பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் அமைப்பு குழுவின் சார்பாக, பாச் மற்றும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு அளித்த உதவிக்கு நன்றி தெரிவித்தார். அவர் கூறுகையில்,

பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நடைபெறவுள்ளது. சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் 2022 பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி மற்றும் பாரலிம்பிக் விளையாட்டுப் போட்டியை சோதனை செய்து முக்கிய வழிகாட்டியனார். இதன் மூலம் பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை வெற்றிகரமாக நடத்த வேண்டிய எங்கள் மன உறுதியும் அதன் மீதான நம்பிக்கையும் வலுவடைந்துள்ளது என்றார்.

பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான ஆயத்தப் பணியை பாச் பாராட்டினார். பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் அமைப்பு குழுவின் முயற்சிக்கு நன்றி தெரிவித்தார்.