சீன எண்ணியல் பொருளாதாரம் பற்றிய ஷிச்சின்பிங்கின் கட்டுரை
2022-01-16 15:55:52

சீன எண்ணியல் பொருளாதாரத்தை தொடர்ந்து வலுப்படுத்தி மேம்படுத்துவது என்ற தலைப்பிலான சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் முக்கிய கட்டுரை ஜனவரி 16ஆம் நாள் ஜுயூஷி எனும் இதழில் வெளியிடப்பட்டது.

கடந்த சில ஆண்டுகளாக பெருமளவில் வேகத்துடன் வளர்ந்து வரும் எண்ணியல் பொருளாதாரம், உலகப் பொருளாதாரக் கட்டமைப்பை மீண்டும் உருவாக்கி, உலக போட்டி கட்டமைப்பை மாற்றும் முக்கிய ஆற்றலாக மாறிக் கொண்டிருக்கிறது. எதிர்காலத்தை நோக்கி, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சூழ்நிலையையும் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பையும் ஒருங்கிணைந்த முறையில் கையாண்டு, எண்ணியல் தொழில் நுட்பம் உண்மையான பொருளாதாரத்துடன் ஆழமாக இணைவதை முன்னேற்றி, தேசிய எண்ணியல் பொருளாதாரத்தைத் தொடர்ந்து வலுப்படுத்தி மேம்படுத்த வேண்டும் என்று இக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 18ஆவது தேசிய மாநாட்டுக்குப் பிறகு, எண்ணியல் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு கட்சியின் மத்தியக் கமிட்டி முக்கியத்துவம் அளித்து வருவதோடு, அதனை தேசிய நெடுநோக்கு திட்டமாக உயர்த்தியுள்ளது. எண்ணியல் பொருளாதாரம் நாட்டின் வளர்ச்சிக்கான ஒட்டுமொத்த நிலைமையுடன் தொடர்புடையது. தேசிய வளர்ச்சிக்கான தேவையையும் வாய்ப்புகளையும் கருத்தில் கொண்டு, அதன் வளர்ச்சிக்கு உச்சநிலை திட்டவரைவையும் அமைப்பு முறையின் கட்டுமானத்தையும் சீராக மேற்கொள்ள வேண்டும் என்றும் இக்கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.