டோங்காவில் எரிமலை வெடிப்பு
2022-01-16 16:57:30

தெற்கு பசிபிக் பெருங்கடலிலுள்ள தீவு நாடான டோங்காவின் கடலடி எரிமலை வெடிப்பு காரணமாக ஏற்பட்ட கடல் கொந்தளிப்பு பற்றி ஐ.நா. தலைமைச் செயலாளர் குட்ரேஸ் 15ஆம் நாள் தனது செய்தித் தொடர்பாளரின் மூலம் வெளியிட்ட அறிக்கையில் ஆழ்ந்த அக்கறையைத் தெரிவித்ததோடு, டோங்காவுக்கு ஆதரவளிக்க ஐ.நா. தயாராக உள்ளது என்றும் கூறினார்.

ஐ.நாவின் இணையதளத்தில் 15ஆம் நாள் வெளியிடப்பட்ட தகவலின்படி, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் விடுத்துள்ள கடல் கொந்தளிப்புக்கான முன்னெச்சரிக்கையில் குட்ரேஸ் கவனம் செலுத்தியுள்ளார்.

டோங்காவில் தொலைத் தொடர்புக்குக் கடும் இடையூறு ஏற்பட்டுள்ளதால், உயிரிழப்பு அல்லது சேதம் பற்றிய அறிக்கை கிடைக்கவில்லை.