• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
வளவனூர் புதுப்பாளையம் எஸ்.செல்வம்
  2011-07-19 11:01:43  cri எழுத்தின் அளவு:  A A A   
ஜுலைத் திங்கள் 17 ஆம் நாள் இடம்பெற்ற செய்திகளைக் கேட்டேன். திபெத் தன்னாட்சிப் பிரதேசம் அமைதியான முறையில் விடுதலை பெற்ற 60 ஆம் ஆண்டு நிறைவு விழாக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளும் வகையில், சீனத் துணை அரசுத் தலைவர் சிச்சிபிங் அவர்களின் தலைமையிலான பிரதிநிதிக்குழு ஒன்று, லாசா நகரம் சென்றடைந்தது என்ற செய்தியை அறிந்து கொண்டேன். அவர்களின் லாசா பயணம், இனிமையான முறையில் நிறைவேறவும், வெற்றி பெறவும் அன்பான நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். திபெத்தில் நடைபெறும் கொண்டாட்ட நிகழ்வுகள் பற்றி, சீன வானொலி மூலம் விரிவான தகவல்களை அளிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.

தமிழ்ப்பிரிவு இணையப் பக்கத்தில், திபெத் 60 ஆண்டுகள் நிறைவு தொடர்பாக உருவாக்கப்பட்டுள்ள முகப்புப் படம் மிகவும் அழகாகவும், பெரிதாகவும் உள்ளது. இதை உருவாக்கிய நண்பர்களுக்கு என் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். ஜுலைத் திங்கள் 15 ஆம் நாள் முதல், திபெத்தில் பயணம் மேற்கொண்டிருக்கும் நண்பர் மோகன் அவர்கள் எடுத்திருக்கும் சில நிழற்படங்களைக் கண்டு மகிழ்ந்தேன். ஜோகாங் கோயிலின் அருகில் எடுக்கப்பட்ட சில நிழற்படங்களைக் காணும்போது, 2009 ஆம் ஆண்டில் நான் மேற்கொண்ட திபெத் பயணம் உடனடியாக என் நினைவுக்கு வந்தது. திபெத் பயணத்தை இனிமையாகக் கழிப்பதுடன், பயணம் தொடர்பான விவரங்களை உடனுக்குடன் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுமாறு நண்பர் மோகன் அவர்களை அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040