• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
காங்கேயம் பி.நந்தகுமார் 080037
  2011-07-19 11:02:07  cri எழுத்தின் அளவு:  A A A   
திபெத் மக்களின் வாழ்க்கை தரம் நாளுக்கு நாள் மேம்பட்டு வரும் தருவாயில் மடத்துறவி தலாய்லாமா திபெத்தை பிளவுபடுத்தும் விதமாய் செயல்பட்டு வருவது கண்டனத்துக்குரியது. இத்தருணத்தில் அமெரிக்க அதிபர் பராக் ஒபமா தலாய்லாமாவை வெள்ளை மாளிகையில் சந்தித்து பேசி இருப்பது சீன அரசின் உறுதியான எதிர்ப்பை மீறிய செயலாகும். பராக் ஒபமா சீனாவின் உள் விவகாரங்களில் தலையிடுவது இரு நாட்டு உறவுகளுக்கு தீங்கு விளைவிக்கும் செயல்போல் தோன்றுகிறது. வரலாற்றில் திபெத் தற்போது மிகச்சிறந்த காலகட்டத்தில் தற்போது உள்ள நிலையில் இதுபோன்ற செயல்கள் கடுமையாக கண்டிக்கப்படவேண்டியவை.

திபெத் மக்களின் வாழ்க்கை நாளுக்கு நாள் மேம்படுவதோடு மட்டுமின்றி, பண்பாடு, மற்றும் சமூகம் செழுமையாகவும் நிதானமாகவும், அதே சமயம் மக்கள் அருமையான வாழ்க்கையை தற்போது நடத்தி கொண்டு வருகிறார்கள் என்பதை திபெத் தன்னாட்சி பிரதேசத்தலைவர் பத்மா டி சின்லி அவர்கள் கூற சீன வானொலி மூலம் அறிந்தேன். திபெத் அரசு கடந்த 5 ஆண்டுகளில் 1700 கோடி யுவானை நிதியாக ஒதுக்கி அதன் மூலம் 2 இலட்சத்து 70 ஆயிரம் விவசாய குடும்பங்களுக்கு பாதுகாப்பான வீடுகளை கட்டி தருவதோடு மட்டுமின்றி அவர்கள் குடும்பத்திற்கு முதுமை உதவிதொகை, மருத்துவசெலவு, வேலை இழப்பு, பணியிடைக்காயம், குழந்தை பிறப்பு என 5 காப்புறுதி வகைகளையும் செய்து வருவதையும் அறிந்தேன். இதையெல்லாம் பார்க்கும் போது திபெத் வரலாற்றில் மிகச்சிறந்த காலகட்டத்தில் உள்ளதையே தற்போது காட்டுகிறது.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040