• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஷாங்காய் மாநகரம் பற்றிய வழிக்காட்டி
  2013-02-02 19:16:01  cri எழுத்தின் அளவு:  A A A   

சுற்றுலாக் காலம்

மித தட்ப வெப்பக் கடல் பருவ வானிலை மண்டலத்தில் இருப்பதால், ஷாங்காயின் நான்கு பருவகாலங்களுக்கிடையே வேறுபாடுகள் தெளிவாகக் காணப்படுகின்றன. ஷாக்காயின் தலைசிறந்த சுற்றுலாக் காலம், மார்ச் முதல் மே வரையும், செப்டம்பர் முதல் நவம்பர் வரையுமான காலமாகும். முதல் கட்டமான வசந்தகாலத்தில், காற்றில் மிதந்து செல்லும் வில்லோ மலர் பஞ்சு, பீச் மலர் ஆகியவை வானில் பறந்து மிதந்து வருவதைக் காணலாம். அப்பொழுது நான்ஹுய் மாவட்டத்திலுள்ள பீச் மலர் கிராமத்திற்குச் சென்று, பீச் மலர் பூத்துக்குலுங்குவதைக் கண்டுகளிப்பதோடு பீச்ப்பழங்களையும் உண்டு சுவைக்கலாம். செப்டம்பர் முதல் நவம்பர் வரையான இலையுதிர்காலத்தில், மேப்பில் மரச் சிவப்பு இலைகளின் அழகைக் கண்டு இரசிக்கலாம். மேலும், நண்டு உணவைச் சாப்பிடும் சிறந்த காலமும், அப்பொழுது தான்.

1 2 3 4 5 6 7 8 9 10
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040