• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பண்பாடு:சீனாவின் குன் ச்சு இசை நாடகத்தின் வளர்ச்சியும் வீழ்ச்சியும்
  2013-11-12 08:57:09  cri எழுத்தின் அளவு:  A A A   

சிங் வம்சத்தின் இடைக்காலத்துக்கு பின், பல்வேறு பிரதேசங்களின் இசை நாடகங்கள் படிப்படியாக செழுமையடையத் துவங்கின. அவற்றின் விறுவிறுப்பான உயிராற்றல் மீண்டும் பொலிவு பெற தொடங்கியது. அவற்றின் வலுவான தாக்கத்துடன், குன் ச்சு இசை நாடகத் துறையும் அதன் மைய இடத்திலிருந்து படிப்படியாக விடுபட்டு விட்டது. சீனாவின் இசை நாடக வரலாற்றில் ஒரு புதிய காலம் பிறந்தது. புதிதாக தோன்றிய இசை நாடகங்களில், பெரும்பாலானவை, ஆடல் பாடல்களை முக்கியமாக கொண்ட, எளிமையான கதைகளைக் கொண்ட நாட்டுப்புற இசை நாடகங்களாகவும், மாற்றியமைக்கப்பட்ட குன்ச்சு மற்றும் இதர பாரம்பரிய இசை நாடகப் படைப்புகளாகவும் இருந்தன. குன் ச்சுவுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, புதிதாக தோன்றிய இந்த இசை நாடகப் படைப்புகளின் மொழி நாகரிகமற்றதாகவும், குழப்பமாகவும் இருந்தது. ஏன் சில வரிகளின் இலக்கண விதிகள் தவறாக இருந்தன. இந்த இசை நாடகப் படைப்புகளின் எழுத்தாளர்கள், பண்பாட்டு அறிவுகள் குறைந்த நாட்டுப்புறக் கலைஞர்களாவர். அவர்கள் கவிதை இயற்றுவதற்கான விதிகளை அறிந்திருக்கவில்லை. பண்டை இலக்கியப் படைப்புகளைக் கற்றுக்கொள்ளவில்லை. ஆனால் அவர்களிடம் சில மேம்பாடுகளும் காணப்பட்டன. இலக்கிய எழுத்தாளர்களும், அறிஞர்களும் இந்த மேம்பாடுகளைக் கொள்ளவில்லை. நாட்டுப்புறக் கலைகள், அப்போதைய பொது மக்கள் பயன்படுத்திய பேச்சு வழக்குகள் ஆகியவற்றை பற்றி இந்த கலைஞர்கள் மிகவும் அறிந்திருந்தனர். இசை நாடகப் படைப்பால், பொது மக்களின் கவனத்தை ஈர்க்கின்ற உத்தியை அவர்கள் திருந்தனர். பொது மக்களின் வாழ்க்கையுடன் நெருக்கமாக தொடர்புடைய இந்த இசை நாடகங்கள், குன் ச்சுவின் பாரம்பரிய அழகியலுக்கு அப்பாற்பட்டு கலையின் எளிமையான, இயல்பான தனிச்சிறப்புகளை வெளிப்படுத்துகின்றன.

1 2 3 4 5
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040