• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பண்பாடு:சீனாவின் யு கு இனத்தின் மொழி கையேற்றல் 1
  2014-03-03 10:15:22  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனாவின் வட மேற்குப் பகுதியில் உள்ள ச்சி லியன் மலையின் வடக்கு அடிவாரத்திலும், ஹெ சி இடைவழியின் மத்திய பகுதியிலும் சீனாவின் சிறுபான்மை தேசிய இனங்களில் ஒன்றான யு கு இனம் வாழ்கின்றது. யு கு இனத்தின் வரலாறு கி. மு காலத்தில் தோன்றியது. இவ்வினத்தின் பண்பாடு, ஹான் மற்றும் திபெத் இனப் பண்பாட்டுடன் ஒன்றிணைந்துள்ளதால், தனிச்சிறப்பு வாய்ந்த தோற்றமளிக்கிறது. வரலாற்றுப் போக்கில், யு கு இனத்தவர்கள் பல இடங்களில் குடிபெயர்ந்ததால், இவ்வினத்தின் எழுத்துக்கள் மறைந்து விட்டன. தற்போது, சீனாவின் மக்கள் தொகை குறைந்த 28 சிறுபான்மை தேசிய இனங்களில் யு கு இனம் ஒன்றாகும்.

இப்போது நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பது, யு கு இனத்தின் ஒரு நாட்டுப்புறப்பாடலாகும். நாடோடி வாழ்க்கை நடத்தும் யு கு இனத்தவர்கள் எளிய, மகிழ்ச்சியான வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இவ்வினத்தின் தனிச்சிறப்பு வாய்ந்த பண்பாடும் மொழியும் தலைமுறை தலைமுறையாக பரவி வந்துள்ளன. தற்போது ஆயர்களின் வாழ்க்கை மேம்பட்டுள்ளது. அவர்கள் ஒதுக்குப்புற ஆயர் பிரதேசங்களிலிருந்து வெளியேறியுள்ளனர். இதர இனங்களின் பண்பாடுகளுடன் ஒன்றிணையும் போக்கில், எழுத்துக்கள் இல்லாத யு கு மொழிக்கு மாபெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. யு கு மொழியை கையேற்றல், உள்ளூர் மக்களின் கடமையாக மாறியுள்ளது.

1 2 3 4 5 6 7
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040