• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
அமெரிக்கா மற்றும் தென் கொரியா பாதுகாப்பு துறைகளில் ஒத்துழைப்பு
  2014-04-18 09:06:43  cri எழுத்தின் அளவு:  A A A   
அமெரிக்காவும் தென் கொரியாவும் ஒத்துழைப்புகளை வலுப்படுத்தி, வட கொரியாவின் ஆத்திரமூட்டல் தன்மை வாய்ந்த செயல்களைக் கூட்டாகச் சமாளிக்கும். அமெரிக்கத் தேசியப் பாதுகாப்பு அமைச்சகம் ஏப்ரல் 17ஆம் நாள் வெளியிட்ட அமெரிக்க-தென் கொரிய பாதுகாப்பு பேச்சுவார்த்தை கூட்டறிக்கையில் இதைத் தெரிவித்தது.

இக்கூட்டறிக்கையின்படி, கூட்டணி உறவை ஆழமாக்குவது, பேரழிவு ஏற்படுத்தும் ஆயுதங்களை நீக்குவது, தொலைத்தொடர்பு, உளவு, இணையம் உள்பட துறைகளின் ஒத்துழைப்புகள் ஆகியவற்றைக் குறித்து, இரு தரப்பும் விவாதம் நடத்தியுள்ளன.

தவிர, வழக்கமான போர் பயிற்சி, ஏவுகணை தடுப்பு, அணுப் பாதுகாப்பு முதலிய துறைகளில், தென் கொரியா இராணுவ ஆற்றலை உயர்த்துவதற்கு அமெரிக்கா உதவியளிக்கும் என்று அமெரிக்கத் தேசியப் பாதுகாப்பு அமைச்சகம் இவ்வறிக்கையில் மீண்டும் தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040