• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
கடலடியில் 7வது முறை தேடுதல் பணி
  2014-04-19 18:35:58  cri எழுத்தின் அளவு:  A A A   

கடலடியில் தேடுதல் பணிக்குப் பொறுப்பேற்கும் புலுஃபின்-21 நீர்மூழ்கி தானியங்கி வாகனம் 7வது முறை தேடுதல் பணியை மேற்கொள்ளத் துவங்கியுள்ளது. மலேசியாவின் எம்எச்370 விமானத்தைத் தேடும் ஆஸ்திரேலியாவின் கூட்டு ஒருங்கிணைப்பு மையம் 19ஆம் நாள் முற்பகல் வெளியிட்ட அறிக்கையில் இத்தகவல் வெளியானது.

18ஆம் நாளிரவு புலுஃபின்-21 நீர்மூழ்கி தானியங்கி வாகனம் கடலடியில் 6வது முறை தேடுதல் கடமையை நிறைவேற்றியுள்ளது. இதுவரை சுமார் 133 சதுர கிலோமீட்டர் பரப்பளவுடைய பகுதியில் அது தேடுதல் பணியை மேற்கொண்டுள்ளது. 6வது முறை கடமையில் கிடைத்த தரவுகள் பகுத்தாராயப்பட்டு வருகின்றன.

மேலும், தேடுதல் பணிக்காக சீன இராணுவத்தைச் சேர்ந்த இல்-76 போக்குவரத்து விமானம் ஒன்று 19ஆம் நாள் காலை 5:50 மணிக்கு பெர்த் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040