• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
புலுஃபின்-21 நீர்மூழ்கி தானியங்கி வாகனத்தின் 9வது தேடுதல்
  2014-04-21 17:21:13  cri எழுத்தின் அளவு:  A A A   
புலுஃபின்-21 நீர்மூழ்கி தானியங்கி வாகனம், தேடுவதற்குத் திட்டமிட்டுள்ள மையப் பகுதியின் சுமார் 60 விழுக்காட்டு கடற்பரப்பளவில் தேடுதல் பணியை மேற்கொண்டுள்ளது. ஆனால், எதையும் கண்டறிய முடியவில்லை. மலேசியாவின் எம்எச்370 விமானத்தைத் தேடும் ஆஸ்திரேலியாவின் கூட்டு ஒருங்கிணைப்பு மையம் ஏப்ரல் 21ஆம் நாள் முற்பகல் இதை அறிவித்தது.

இம்மையம் வெளியிட்ட தகவல்களின்படி, புலுஃபின்-21 நீர்மூழ்கி தானியங்கி வாகனம் அன்று முற்பகல் 8வது முறை தேடுதல் பணியை நிறைவேற்றி, 9வது முறையாகத் தேடுதல் பணியை மேற்கொள்ளத் துவங்கியுள்ளது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040