• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பாலஸ்தீன-இஸ்ரேல் அமைதி பேச்சு வார்த்தையை நீட்டிக்க நிபந்தனை
  2014-04-23 09:34:48  cri எழுத்தின் அளவு:  A A A   
பாலஸ்தீன-இஸ்ரேல் அமைதி பேச்சுவார்த்தையை நீட்டிப்பதற்கான நிபந்தனையைப் பாலஸ்தீன அரசுத் தலைவர் அப்பாஸ் ஏப்ரல் 22ஆம் நாள் பொது நிகழ்ச்சியில் முதன்முறையாக கூறினார். அத்துடன், பாலஸ்தீனத்தை இஸ்ரேல் நீண்டகாலமாகக் கைபற்றியிருப்பது, அப்பிரதேசத்தில் பாலஸ்தீன தேசிய அதிகார நிறுவனத்தின் நிர்வாக உரிமைகளைப் பறிப்பதாக உள்ளதற்கு அப்பாஸ் கடும் கண்டனம் தெரிவித்தார்.

சிறையிலுள்ள கடைசி தொகுதி பாலஸ்தீன மக்களை வாக்குறுதியின்படி இஸ்ரேல் விடுவிப்பது, வரும் 3 திங்களில் எல்லை பிரச்சினைக்கு முயற்சியுடன் தீர்வுக் காண்பது ஆகிய இரண்டு முன்நிபந்தனையில், 29ஆம் நாள் நிறைவு பெறவுள்ள அமைதி பேச்சுவார்த்தை காலத்தை நீட்டிப்பதைப் பாலஸ்தீனம் ஏற்றுக்கொள்ளும். ரமல்லாவில் அமைந்துள்ள அதிகார நிறுவன மாளிகையில் இஸ்ரேல் செய்தியாளர் பிரதிநிதி குழுவை அதேநாள் சந்தித்தபோது அப்பாஸ் இவ்வாறு தெரிவித்தார்.

அமைதி பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தால், 1994ஆம் ஆண்டு பாலஸ்தீன தேசிய அதிகார நிறுவனம் உருவாக்கப்பட்டதற்கு முன் பாலஸ்தீனத்திலுள்ள அனைத்து விவகாரங்களையும் முழு பொறுப்புடன் நிர்வகிக்க வேண்டியதை இஸ்ரேல் எதிர்கொள்ள நேரிடும் என்றும் அப்பாஸ் கூறினார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040