• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஜப்பான்-அமெரிக்க பாதுகாப்பு உடன்படிக்கைக்கு சீனா எதிர்ப்பு
  2014-04-23 18:27:59  cri எழுத்தின் அளவு:  A A A   
தியாவ்யூ தீவுப் பிரச்சினையை, ஜப்பான்-அமெரிக்க பாதுகாப்பு உடன்படிக்கைக்குப் பொருத்தமான அம்சமாக கொண்டிருப்பதை சீனா உறுதியாக எதிர்க்கிறது. மேலும் அரசுரிமை, இறையாண்மை ஆகியவை தொடர்பான பிரச்சினையில் எந்த தரப்புக்கும் ஆதரவளிக்காத வாக்குறுதியை அமெரிக்கா பின்பற்ற வேண்டும். சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் சின்காங் 23ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் இதைத் தெரிவித்தார்.

யோமியூரி ஷிம்புன் செய்தியேட்டுக்கு பேட்டியளித்த போது, தியாவ்யூ தீவு ஜப்பான் ஆட்சியின் கீழ் உள்ளது என்று அமெரிக்க அரசுத் தலைவர் பராக் ஒபாமா தெரிவித்தார். இத்தகவல் பற்றிய கேள்விக்குப் பதிலளிக்கையில், தியாவ்யூ தீவு சீனாவின் உரிமை பிரதேசம். இத்தீவை ஜப்பான் கைப்பற்றிய செயல் சட்டவிரோதமானது. நியாயமற்றது என்று சின்காங் கூறினார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040