• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பாகிஸ்தான் வணிக மற்றும் தொழில் கழக கூட்டமைப்பில் கராச்சியிலுள்ள சீனத் துணைத் தூதர் பயணம்
  2014-04-24 17:21:04  cri எழுத்தின் அளவு:  A A A   
பாகிஸ்தானின் கராச்சியிலுள்ள சீனத் துணைத் தூதர் மா யாஓ அழைப்பை ஏற்று, பாகிஸ்தான் வணிக மற்றும் தொழில் கழக கூட்டமைப்பில் அதன் இயக்குனர் குழு உறுப்பினர்களுடன் 23ஆம் நாள் கலந்துரையாடினார்.

சீன-பாகிஸ்தான் பொருளாதார வர்த்தக உறவின் வளர்ச்சிக்கு நீண்டகாலமாக பங்களித்து வரும் இக்கூட்டமைப்பை மா யாஓ பாராட்டினார். பாகிஸ்தானுடன் இணைந்து, சீன-பாகிஸ்தான் பொருளாதாரப் பாதையின் கட்டுமானத்தை முயற்சியுடன் முன்னேற்ற சீனா விரும்புவதாக அவர் தெரிவித்தார்.

பாகிஸ்தான் வணிக மற்றும் தொழில் கழக கூட்டமைப்புக்கு கராச்சியிலுள்ள சீனத் துணை நிலை தூதரகம் வழங்கிய ஆதரவுக்கு இக்கூட்டமைப்பின் தற்காலிக தலைவர் நன்றி தெரிவித்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040