• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பிரிக்ஸ் வங்கி பற்றிய கேள்வியும் பதிலும்
  2014-07-17 11:11:10  cri எழுத்தின் அளவு:  A A A   

பிரிக்ஸ் வங்கி அமைக்கப்பட்டுள்ளது. இந்த வங்கி எத்தகைய வங்கியாக இருக்கிறது? பொது மக்கள் இவ்வங்கியில் பணத்தை சேமிக்கலாமா?போன்ற கேள்விகளுக்கு பதில் அளிக்கின்றோம்.

1, பிரிக்ஸ் வங்கி என்பது என்ன?
பிரிக்ஸ் என்பது, பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய ஐந்து நாடுகளின் ஆங்கில பெயர்களின் முதல் எழுத்துக்கள் இணையாக அடங்கும் ஒரு சொல். இந்நிலையில், "பிரிக்ஸ் வங்கி"என்பது, பிரிக்ஸ் நாடுகள் வளர்ச்சி வங்கி என்ற முழுப் பெயரின் சுருக்கம்.

2, பிரிக்ஸ் வங்கி அமைப்பதற்கு காரணம் என்ன?
பிரிக்ஸ் கூட்டமைப்பின் 5 உறுப்பு நாடுகளின் நிலப்பரப்பளவு, உலகில் 29.6விழுக்காடு வகிக்கிறது. இவற்றின் மக்கள் தொகை உலகில் 42.6விழுக்காடு இடம்பெறுகிறது. இவற்றின் பொருளாதார அளவு, உலகின் 21விழுக்காடு வகிக்கிறது. மேலும், கடந்த பத்தாண்டு ஆண்டுகளாக, உலக பொருளாதாரம் அதிகரிப்பதில் இவற்றுக்கு 50விழுக்காட்டுக்கு மேலான பங்களிப்பு உள்ளது.

3, பிரிக்ஸ் வங்கியின் முக்கிய திட்டப்பணிகள் என்ன?
பிரிக்ஸ் கூட்டமைப்பின் உறுப்பு நாடுகள், பிற வளர்ந்து வரும் நாடுகள் மற்றும் வளரும் நாடுகளின் அடிப்படை வசதி வளர்ச்சிக்காக, இந்த வங்கி நிதியுதவி அளிக்கும்.

4, பிரிக்ஸ் வங்கியின் அமைப்பாளர்கள் யார்?
பிரிக்ஸ் கூட்டமைப்பின் ஐந்து உறுப்பு நாடுகள் பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா , தென்னாப்பிரிக்கா இவ்வங்கியை அமைத்துள்ளன.

5, பிரிக்ஸ் வங்கி எப்போது அமைக்கப்பட்டது?
2014ஆம் ஆண்டு ஜுலை திங்கள் 15ஆம் நாள் பிரிக்ஸ் நாடுகளின் 6-வது உச்சி மாநாட்டில் பிரிக்ஸ் வங்கி அமைக்கப்பட்டது என அறிவிக்கப்பட்டுள்ளது.

6, பிரிக்ஸ் வங்கியின் மூலதனம் எவ்வளவு?
பிரிக்ஸ் வங்கியின் அனுமதித்த மூலதனம் பத்தாயிரம் கோடி அமெரிக்க டாலர். முதல் கட்டத்தில் இந்த வங்கி துவங்குவதற்கு தேவையான நிதியை, ஐந்து உறுப்பு நாடுகளும் சமமாக பகிர்ந்து கொண்டு முறையே 1000கோடி அமெரிக்க டாலர் பங்களிப்பை அளிக்கும். மேலும், பிரிக்ஸ் நாடுகளுக்கிடையே அவசர நிலை கையிருப்பு நிதியம் ஒன்று அமைக்கப்படும். அதன் நிதி அளவு பத்தாயிரம் கோடி அமெரிக்க டாலர்.

7, பிரிக்ஸ் வங்கியின் பெயர் என்ன?
பிரிக்ஸ் வங்கிக்கு"புதிய வளர்ச்சி வங்கி" என பெயரிடப்பட்டது.

8, பிரிக்ஸ் வங்கியின் தலைமை அலுவலகம் எங்கு அமைய உள்ளது?
பிரிக்ஸ் வங்கியின் தலைமை அலுவலகம், சீனாவின் ஷாங்காய் மாநகரில் அமையும். மேலும், ஆப்பிரிக்க பிரதேச மையம், தென்னாப்பிரிக்காவில் அமையும்.

9, பிரிக்ஸ் வங்கியின் முதல் தலைவர் யார்?
பிரிக்ஸ் வங்கியின் முதல் தலைவர், இந்தியாவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு நியமிக்கப்படுவார். மேலும், ஆளுனர்கள் குழுவின் முதல் தலைவர் ரஷியாவைச் சேர்ந்தவர். இயக்குநர்கள் குழுவின் முதல் தலைவர் பிரேசிலில் இருந்து தேர்தெடுக்கப்படுவார்.

10, பிரிக்ஸ் வங்கியில் பணம் சேமிக்கலாமா?
பணம் சேமிக்க முடியாது. இது, உலக வங்கி போன்றது. பிரிக்ஸ் நாடுகள் மற்றும் பிற வளரும் நாடுகளின் அடிப்படை வசதி, தொடரவல்ல வளர்ச்சி ஆகியற்றுக்காக இவ்வங்கி செயல்படும். பிரிக்ஸ் நாடுகள் வங்கிக்கு தேவையான நிதி வழங்கும். இது, பொது மக்களிடம் இருந்து நிதி திரட்டக் கூடாது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040