• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
மலேசிய எம்எச் 17 விமான விபத்துக்கு மீட்பு அளவு விரிவாக்கம்
  2014-07-21 10:12:54  cri எழுத்தின் அளவு:  A A A   
மலேசிய எம்எச் 17 விமான விபத்துக்கு நாட்டம் மற்றும் மீட்புப் பணியின் தலைமை ஒருங்கிணைப்புக்கு உக்ரைன் தேசிய அவசர ஆணையம் பொறுப்பேற்கிறது. அவ்விபத்து நிகழ்ந்த தொனெத்ஸ்க் மாநிலத்தில் 50 சதுர கிலோமீட்டர் மீட்புப் பரப்பளவு விரிவாக்கப்பட்டுள்ளது என்று உக்ரைன் தேசிய அவசர ஆணையத்தின் செய்தி அலுவலகம் 20ஆம் நாள் தெரிவித்தது.

மலேசிய எம்எச் 17 விமானக் கருப்புப் பெட்டி கண்டறியப்பட்டு, தொனெத்ஸ்க் மாநிலத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று உக்ரைன் கிழக்கு பகுதியிலுள்ள அரசு சாரா ஆயுத படை 20ஆம் நாள் ட்விட்டர் இணையத்தளத்தில் கூறியதாக இன்டர்ஃபெக்ஸ் செய்தி ஊடகம் வெளியிட்ட தகவல் தெரிவித்தது.

அவ்விமானத்தின் கருப்புப் பெட்டியைக் கண்டறிந்தால், சர்வதேச அமைப்பு நிபுணர்களுக்கு உடனடியாகக் கொடுப்பேன் என்று உக்ரைன் தொனெத்ஸ்க் மக்கள் குடியரசு தலைமையமைச்சர் பொரொத்தை 19ஆம் நாள் செய்தி ஊடகத்துக்கு கூறினார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040