• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
20-வது காமன்வெல்த் போட்டி
  2014-07-23 11:06:45  cri எழுத்தின் அளவு:  A A A   
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் 20-வது காமன்வெல்த் போட்டி புதன்கிழமை நள்ளிரவு 12:30 மணிக்கு கோலகலமாகத் தொடங்கவுள்ளது.
ஸ்காட்லாந்தின் பிரத்யேக கால்பந்து மைதானமான செல்டிக் பார்க் மைதானத்தில் தொடக்கவிழா நடைபெறவுள்ளது. மான்செஸ்டர் மற்றும் மெல்போர்னில் காமன்வெல்த் போட்டி தொடக்க விழாவை ஒருங்கிணைப்பு செய்த, ஜேக் மார்டன் ஏஜென்ஸி தொடக்க விழாவுக்கான ஏற்பாடுகளை செய்துள்ளது.
பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் போட்டியைத் தொடங்கி வைப்பார். கிராமி விருது பெற்ற ராட் ஸ்டீவர்ட், ஸ்காட்லாந்து பாடகி சூசன் பாய்லே, கிளாசிக்கல் பிரிட் விருது வென்ற நிகோலோ பெனிடெட்டி, கிளாஸ்கோ பாடகி ஏமி மேக் டொனால்டு மற்றும் ஜூலி போலிஸ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் தொடக்க விழாவில் கலை நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளனர்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040