• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஷி ச்சின்பீங்கின் லத்தின் அமெரிக்க பயணத்துக்கு ஸ்பெனிஷ் மொழி செய்தி ஊடகத்தின் பாராட்டு
  2014-07-23 14:27:00  cri எழுத்தின் அளவு:  A A A   
சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பீங் லத்தின் அமெரிக்காவில் பயணம் மேற்கொண்ட போது நிகழ்த்திய உரையையும், பெற்றிருந்த சாதனைகளையும் ஸ்பெனிஷ் மொழி செய்தி ஊடகங்கள் வெகுவாகப் புகழ்ந்து பாராட்டின. அவரது பயணம், சீன-லத்தின் அமெரிக்க உறவை புதிய கட்டத்துக்கு கொண்டு செல்வதற்குத் துணை புரியும் என்று அவை தெரிவித்தன.

ஷி ச்சின்பீங் 17ஆம் நாள் முதல் பிரேசில், அர்ஜென்டீனா, வெனிசூலா, கியூபா ஆகிய நாடுகளில் அரசு முறை பயணம் மேற்கொள்ளத் தொடங்கினார். பயணத்தின் போது சீனா, லத்தின் அமெரிக்கா மற்றும் கரிபியன் நாடுகளின் தலைவர்கள் சந்திப்பிலும் அவர் கலந்து கொண்டார்.

ஷி ச்சின்பீங், அர்ஜென்டீனா அரசு தலைவர் க்ரிஸ்டினா அம்மையாருடன் நடத்திய சந்திப்பு, இவ்விரு நாட்டுறவின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புதிய துவக்கமாகும் என்று எஃபி எனும் ஸ்பெனிஷ் செய்தி நிறுவனம் தெரிவித்தது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040