• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
லிஜியாங் புறநகரிலுள்ள காட்சித் தலங்கள்
  2014-08-11 14:18:37  cri எழுத்தின் அளவு:  A A A   

யுலோங் பனி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள பாய்ஷா கிராமம், நாசி இன மக்கள் குழுமி வாழும் இடங்களில் ஒன்றாகும். வணிகப் பண்பாட்டின் தாக்கத்திலும், அது முன்பைப் போல அமைதியாக உள்ளது. அழகான பாய்ஷா கிராமம், சொங் வம்சத்துக்கு முன் லிஜியாங்கின் அரசியல் மற்றும் இராணுவ மையமாக இருந்தது. நாசி இனப் பண்பாட்டின் பிறப்பிடங்களில் ஒன்றாகவும் அது திகழ்கிறது. இங்குள்ள தாபாவ்ஜி மாளிகை, வென்சாங் மாளிகை, லியூலீ மண்டபம், ஜின்காங் மண்டபம், தாதிங் காட்சிக்கூடம் உள்ளிட்ட பௌத்தமத கட்டிடங்கள், திங் என்ற சீன எழுத்து வடிவிலான வீதிகள், பழைய குடியிருப்புகள், கடைகள் ஆகியவை அனைத்தும் பார்வையிடத்தக்கவை.
1 2 3 4 5 6 7
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040