கோவையில் நடைபெற்ற தமிழக காவல் துறையினருக்கான நீச்சல், தொடர் ஓட்டம் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகளில், சென்னை மாநகர காவல் அணி கோப்பையை வென்றது.
தமிழக காவல் துறையினருக்கான நீச்சல், தொடர் ஓட்டம் உள்ளிட்ட மூன்று நாள் விளையாட்டுப் போட்டி, கோவை எட்டிமடை அமிர்தா பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 19-இல் துவங்கி 21-ஆம் தேதி நிறைவடைந்தது.