• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
'தா யுன் ஹெ' என அழைக்கப்படும் சீனப் பெரும் கால்வாய் திட்டப்பணி
  2014-08-29 11:06:56  cri எழுத்தின் அளவு:  A A A   

கீ மூ. 486ஆம் ஆண்டில் கட்டியமைக்கப்பட துவங்கிய சீனாவின் தா யுன் ஹே எனும் பெரும் கால்வாய், ஜிங்-ஹாங் கால்வாய், சுய்-டாங் கால்வாய், ச்செ துங் கால்வாய் ஆகிய மூன்று பகுதிகளால் உருவாக்கப்படுகின்றது. உலக மரபுச் செல்வ விண்ணப்பத் திட்டப்பணியில் இறுதியாக சேர்க்கப்பட்ட தா யுன் ஹே மரபுச் செல்வங்கள், சீனாவின் 2 மாநகரங்கள், 6 மாநிலங்கள் மற்றும் 25 நகரங்களில் பரவி உள்ளன. விண்ணப்ப திட்டப்பணியில் சேர்க்கப்பட்ட 27 கால்வாய் மரபு செல்வப் பகுதிகளின் மொத்த நீளம், சுமார் 1011 கிலோமீட்டர் ஆகும். இக்கால்வாய் பகுதிகளின் நெடுகிலும் 58 மரபுச் செல்வங்கள் உள்ளன.

சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளின் தொடரவல்ல வளர்ச்சியுடன், இன்று வரை போக்குவரத்து, ஏற்றியிறக்கல், வெள்ளப்பெருக்கு வெளியேற்றம், பாசனம், நீர் வினியோகம் ஆகிய துறைகளில், தா யுன் ஹே இன்னமும் முக்கிய பங்காற்றியுள்ளது. தா யுன் ஹே நெடுகிலுள்ள பிரதேசங்களில், இது இன்றியமையாத போக்குவரத்து முறையாகும். பண்டைக்காலம் தொட்டு இக்காலம் வரை, சீனப் பொருளாதார செழுமையையும், சமூக அமைதியையும் உத்தரவாதம் செய்வதில் தா யுன் ஹே முக்கிய பங்காற்றி வருகின்றது.

தா யுன் ஹே உலக மரபுச் செல்வப் பட்டியலில் சேர விண்ணப்பம் செல்வதற்கான ஆயத்தப் பணி துவங்கி, இது வரை சுமார் 8 ஆண்டுகள் ஆகி விட்டன.

1 2 3 4 5
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040