• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
உலகளவில் சீனத் தூதரகப் பாதுகாப்புச் சேவை துவக்கம்
  2014-09-02 17:20:39  cri எழுத்தின் அளவு:  A A A   
சீன வெளியுறவு அமைச்சகத்தின் உலகத் தூதரகப் பாதுகாப்பு மற்றும் சேவை பற்றிய அவசரத் தொடர்பு மையமான 12308 தொலைப்பேசி செப்டம்பர் 2ஆம் நாள் அதிகாரப்பூர்வமாகத் துவக்கப்பட்டுள்ளது. இந்த நேரடி தொலைப்பேசி 24 மணிநேரச் சேவையளிக்கும். சீன வெளியுறவு அமைச்சர் வாங்யி துவக்க விழாவில் இத்தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டார்.

அவசர நிலைமையில் அழைப்பாளருக்கு தூதரகப் பாதுகாப்பு பற்றிய வழிக்காட்டல் மற்றும் ஆலோசனையை வழங்குவதும், தேவைக்கிணங்க, தொடர்புடைய வெளிநாட்டிலுள்ள தூதரகத்தை ஒருங்கிணைந்து உதவியளிப்பதும் இந்த நேரடி தொலைப்பேசியின் முக்கிய கடப்பாடாகும்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040