• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன அரசவை உறுப்பினர் அமெரிக்க அரசுத் தலைவரின் தேசியப் பாதுகாப்பு விவகார ஆலோசகர் சந்திப்பு
  2014-10-21 09:38:39  cri எழுத்தின் அளவு:  A A A   

சீன அரசவை உறுப்பினர் யாங் ச்சே ச்சு அமெரிக்க அரசுத் தலைவரின் தேசியப் பாதுகாப்பு விவகார ஆலோசகர் கொண்டலீசா ரைஸ் அம்மையாரை அக்டோபர் 20ஆம் நாள் வாஷிங்டனில் சந்தித்துரையாடினார். சீன-அமெரிக்க உறவு மற்றும் தற்போதைய பொது அக்கறை கொண்ட முக்கிய சர்வதேச மற்றும் பிரதேச பிரச்சினைகள் குறித்தும் அவர்கள் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டுள்ளனர்.

யாங் ச்சே ச்சு கூறுகையில், சீனாவும் அமெரிக்காவும் நேருக்கு நேர் வளர்ந்து, பல துறைகள் மற்றும் முக்கிய சர்வதேச பிரதேச பிரச்சினைகளிலுள்ள ஒத்துழைப்புகளையும் ஒருங்கிணைப்பையும் இரு தரப்பும் ஆழமாக்க வேண்டும். சீன-அமெரிக்கப் புதிய ரக உறவின் கட்டுமானம் மேலதிக பயனுள்ள சாதனைகளைப் பெறுவதை முன்னேற்றுவிக்க வேண்டும் என்றார்.

சீன-அமெரிக்கப் புதிய ரக பெரிய நாட்டுறவை உருவாக்குவதில் அமெரிக்கா முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. சீனத் தரப்புடன் இணைந்து, பிரதேச மற்றும் உலகத் தன்மை வாய்ந்த அறைகூவலைக் கூட்டாகச் சமாளிக்க அமெரிக்கா விரும்புவதாக ரைஸ் அம்மையார் தெரிவித்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040