• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
அமெரிக்கா வழங்கிய ஆயுதங்கள் ஐ.எஸ் அமைப்புக்கு கிடைக்க வாய்ப்புள்ளது
  2014-10-22 10:39:51  cri எழுத்தின் அளவு:  A A A   

அமெரிக்க படை 19ஆம் நாளிரவு சிரியாவின் கோபனி பகுதியில் வானில் இருந்து ஆயுதங்களைக் கொடுத்தது. இவற்றுள், சில ஆயுதங்கள் இஸ்லாமிக் ஸ்டேட் தீவிரவாத அமைப்புக்கு கிடைக்க வாய்ப்புள்ளதாக, 21-ஆம் நாள் செவ்வாய்கிழமை இணைதளத்தில் வெளியான காணொளி ஒன்று தெரிவிக்கிறது.

அமெரிக்காவின் மத்திய தலைமையகமும் பாதுகாப்பு அமைச்சகமும் இந்த காணொளியின் உள்ளடக்கங்களை ஆய்வுச் செய்து வருகின்றன. காணொளியில் காணப்பட்டுள்ள இந்த ஆயுதங்கள், கடந்த ஞாயிற்றுக்கிழமை குர்து படையினருக்கு வழங்கப்பட்ட பொருட்களை சேர்ந்தவையா என்பது இதுவரை தெரியவில்லை என்று அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவித்துள்ளார்.

19ஆம் நாள் விமானம் மூலம் வானில் வழங்கப்பட்ட பொருட்களில் சிறிய ரக ஆயுதங்கள், வெடி மருந்துகள், மருத்துவப் பொருட்கள் ஆகியவை இடம்பெற்றிருந்தன. கிடைத்துள்ள தகவல்களின்படி, மொத்தம் 28 பொதிகளில் ஒன்று இதுவரை வெற்றிகரமாக கிடைக்கவில்லை என்று ஜான் கிர்பி குறிப்பிட்டார். மிகப் பெரும்பாலான ஆயுதங்கள் உள்ளூர் குர்து படைக்குக் கிடைத்துள்ளன என்று அமெரிக்க படை நம்புவதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040